எரவிகுளம் தேசியப் பூங்காவில் அரியவகைத் தவளைகள் கண்டுபிடிப்பு

வெள்ளி, மே 7, 2010


இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள எரவிகுளம் தேசியப்பூங்காவிற்கு உட்பட்ட பகுதியில் புதிய, செம்மஞ்சள் நிற அரியவகைத் தவளையினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அண்மையில் வெளியான கரண்ட் சயன்ஸ் பனுவலில் சுட்டப்பட்டுள்ளது. இதற்கு Raorchestes resplendens எனப் பெயரிடப்பட்டுள்ளது.


எரவிகுளம் தேசியப் பூங்காவில் ஆனைமுடியின் உச்சி

எரவிகுளம் தேசியப் பூங்காவில் ஆனைமுடி மலையில் மூன்று கிலோமீட்டர் சுற்றுவட்டத்தில் இவை காணப்படுவதாகவும், இந்தப் பகுதி பாதுகாக்கப்படவேண்டியது அவசியம் என அறிவியலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.


“இத்தவளையினம் வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்படவில்லை,” எனக் கண்டுபிடிப்பாளர் குழுவிற்குத் தலைமை தாங்கிய தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எஸ். டி. பிஜு, பிரசல்ஸ் சுயாதீனப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிராங்கி பொசுயிட் ஆகியோர் தெரிவித்தனர்.


மூலம் தொகு