எயிட்டி நிலநடுக்கம்: படங்களில்
சனி, சனவரி 16, 2010
எயிட்டி சென்ற செவ்வாய்க்கிழமை 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தால் பெரும் பாதிப்படைந்தது. எண்ணிலடங்காதோர் கொல்லப்பட்டனர். தலைநகர் போர்ட்-ஓ-பிரின்சில் பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், 50,000 பேருக்கு மேல் இறந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது.
இந்நிலநடுக்கம் ஏற்படுத்திய பேரழிவுகளை விக்கிசெய்திகளின் சிறப்புப் படங்கள் காட்டுகின்றன:
-
நலநடுக்கத்தின் செறிவைக் காட்டும் வரைபடம். மிகவும் பாதிக்கப்பட்ட இடங்கள் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளன.
-
நிலநடுக்கத்தின் மையத்தைக் காட்டும் இன்னுமொரு வரைபடம். 2.5 மில்லியன் மக்கள் வசிக்கும் தலைநகருக்கு மிகக் கிட்டவாக நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ். ஒரு சில கட்டிடங்களே பாதிப்படையாமல் இருந்தன. அனேகமானவை முற்றிலுமோ அல்லது பகுதியாகவோ இடிந்திருந்தன.
படிமம்: UNDP. -
வானிலிருந்து எடுக்காப்பட்ட இன்னும் ஒரு படம். நகர வீதிகள்.
படிமம்: UNDP. -
நகர மையத்தில் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக கூடாரங்கள்.
படிமம்: UNDP. -
தனது உடமைகளைத் தேடி விட்டு வெளியேறும் ஒரு நபர்.
படிமம்: UNDP. -
ஜனாதிபதி மாளிகை. பெரும் பாதிப்படைந்த கட்டிடங்களில் ஒன்று. அதிபரும் அவரது குடும்பமும் உயிர் தப்பினர்.
படிமம்: UNDP. -
மேலும் தற்காலிக கூடாரங்கள்.
-
தலைநகரில் கட்டிட இடிபாடுகள்.
படிமம்: UNDP. -
மொண்டானா உணவகம், ஐந்து மாடிக் கட்டிடம் தரை மட்டமாகியது.
படிமம்: UNDP. -
நிலநடுக்கத்தின் பின் போர்ட்-ஓ-பிரின்ஸ் துறைமுகம்.
-
துறைமுகத்தில் கப்பற்பொதி ஒன்று மிதக்கிறது.
-
துறைமுகப் பகுதியில் மேலும் பாதிப்புகள்
-
அமெரிக்க உதவிக் கப்பல்கள்
-
ஐநா ஊழியர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
-
பிரேசில் இராணுவத்தினரின் உதவிப் பணி
படிமம்: Agencia Brasil. -
பிரேசில் இராணுவத்தினரின் மீட்புப் பணி
படிமம்: Agencia Brasil. -
கூடார்ரம் ஒன்றில் மருத்துவ உதவி
படிமம்: Agencia Brasil. -
பிரேசிலின் பாதுகாப்பு அமைச்சர் நெல்சன் ஜோபிம் உடனடியாக எயிட்டிக்கு விரைந்தார்.
படிமம்: Agencia Brasil. -
இடிந்த பாடாசாலை ஒன்றில் இருந்து வெளியேற்றப்பட்ட இறந்த உடல்.
படிமம்: UNDP. -
மேலும் ஒரு உடல்
படிமம்: UNDP. -
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எயிட்டி நிலவரம் குறித்து வெள்ளி மாளிகையில் கலந்துரையாடல்
தொடர்புள்ள செய்திகள்
- "எயிட்டியில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம் பலர் உயிரிழப்பு". விக்கிசெய்திகள், ஜனவரி 13, 2010
மூலம்
- "Haiti quake aid effort hampered by blockages". பிபிசி, சனவரி 15, 2010
- "Aid struggles to reach Haitians". அல்ஜசீரா, சனவரி 15, 2010