உலகின் முதல் செயற்கை உயிரி கண்டுபிடிக்கப்பட்டது

சனி, மே 22, 2010


உயிரியல் உலகின் உச்சக்கட்ட சாதனையாக, செயற்கை உயிரி (செல்) ஒன்றை உருவாக்கி, அமெரிக்க அறிவியலாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.


அமெரிக்காவில் மேரிலாந்து மற்றும் கலிபோர்னியா மாகாணங்களிலிருந்து செயல்படும் ஜே.சி.வி.ஐ. என்ற ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த கிரெய்க் வெண்டர் என்பவரின் தலைமையில் அறிவியலாளர்கள் குழு இந்த செயற்கை உயிரியை உருவாக்கியுள்ளனர்.


”த சயின்ஸ்” என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கண்டுபிடிப்பு, அறிவியல் முன்னேற்றத்தில் ஒரு மாபெரும் முன்னேற்றம் எனக் கருதப்படுகிறது.


"இந்த பாக்டீரியாவின் மரபணுப் பாரம்பரியம் என்பது ஒரு கணினி தான். ஆகவே, செயற்கையாகப் படைக்கப்பட்ட முதல் உயிர் வடிவம் என்றால் அது நிச்சயம் இதுதான்." என்கிறார் இந்த செயற்கை உயிரியைப் படைத்திருக்கின்ற ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் டாக்டர் கிரெய்க் வெண்டர்.

அதாவது ஒரு பாக்டீரியாவுக்கான மரபணுக் கட்டமைப்பை கணினி மென்பொருள் துணையுடன் வடிவமைத்து செயற்கையாக இரசாயனங்களைக் கலந்து உருவாக்கி அதனை ஒரு உயிரணுக்குள் செலுத்தி விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.

இந்த செயற்கை உயிரிகளின் பலன்கள் மிகவும் மிகைப்படுத்திச் சொல்லப்படுவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மூலம் தொகு