உதயன் பத்திரிகையாளர் மீது யாழ்ப்பாணத்தில் தாக்குதல்
சனி, மே 28, 2011
- 17 நவம்பர் 2013: பிரித்தானியப் பிரதமர் கேமரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணப் பயணம்
- 25 அக்டோபர் 2013: வட மாகாண சபையின் முதல் அமர்வு கைதடியில் புதிய கட்டடத்தில் தொடங்கியது
- 12 அக்டோபர் 2013: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் முதலமைச்சர் முன்னிலையில் பதவியேற்றனர்
- 7 அக்டோபர் 2013: வடமாகாண சபையின் முதலமைச்சராக சி. வி. விக்னேசுவரன் அரசுத்தலைவர் முன்னிலையில் பதவியேற்றார்
- 24 செப்டெம்பர் 2013: வட மாகாணசபை முதலமைச்சர் பதவிக்கு சி. வி. விக்னேசுவரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவு
இலங்கையின் வட மாகாணத் தலைநகர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் செய்தியாளர் கவிதரன் என்பவர் இன்று சனிக்கிழமை காலை இனந்தெரியாதோரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயைச் சேர்ந்த கவிதரன் உதயன் அலுவலகம் அமைந்துள்ள யாழ்நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில் ஐந்து நபர்களைக் கொண்ட குழுவொன்று அவரைத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. துடுப்பாட்ட மட்டை மற்றும் விக்கெட்டுக்களால் இவர் கடுமையாகத் தாக்க்கப்பட்டு யாழ் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத்தாக்குதல் குறித்த மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் உதயன் பத்திரிகை அலுவலகம் மீதும் அதன் பணியாளர்கள் மீதும் அடிக்கடி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. 2007 ஏப்ரல் மாதத்தில் உதயன் செய்தியாளர் செல்வராஜா ரஜீவர்மன் யாழ்ப்பாணத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். மார்ச் 2009 இல் ஈழப்போர் உச்சக்கட்டத்தில் நடைபெற்ற போது உதயன் பணிமனை மீது கிரனைட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. சென்ற மாதம் ஏப்ரல் 28 இல் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற உதயன் செய்தியாளர் தாக்கப்பட்டு அவர் கொண்டுசென்ற ஒளிப்படக்கருவியும் சேதமாக்கப்பட்டது.
மூலம்
தொகு- யாழ். உதயன் செய்தியாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல், தமிழ்மிரர், மே 28, 2011
- Jaffna journalist attacked, டெய்லிமிரர், மே 28, 2011
- உதயன் பத்திரிகையின் ஊடகவியலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல், தமிழ்வின், மே 28, 2011