உச்ச நீதிமன்றத்தில் அம்பானி சகோதரர்கள் விவகாரம்

புதன், அக்டோபர் 21, 2009, டெல்லி:

முக்கேஷ் அம்பானி


உலகின் பெரும் பணக்காரர்களில் இருவரான இந்தியாவின் அம்பானி சகோதரர்களுக்கு இடையிலான சண்டை தற்போது இந்திய உச்சநீதிமன்றத்தை எட்டியுள்ளது.


இந்தியாவின் இயற்கைவாயுப்படுகைகளில் இருந்து பெறப்படும் எரிவாயுவுக்கான விலையை நிர்ணயிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.


சந்தை விலையை விட தனது நிறுவனத்துக்கு குறைந்த விலையில் எரிவாயுவை விற்பதற்கு ரிலையன்ஸ் என்ற இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனத்தை தலைமைதாங்கி நடத்தி வரும் தனது சகோதரர் முகேஷ் அம்பானி முன்பு ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் அவர் அந்த ஒப்பந்தப்படி தற்போது நடக்கவில்லை என்றும் முகேஷிடமிருந்து விலகியுள்ள ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்ஸஸ் லிமிட் நிறுவன உரிமையாளர் அனில் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கான ஒப்பந்தம் தங்களுக்குள் 2005-க்கு முன்பே கையெழுத்தாகியுள்ளதாகவும் அனில் அம்பானி கோரி வருகிறார்.


ஆனால் 'இயற்கை எரிவாயு அரசின் சொத்து. அதை எடுத்துத் தரும் ஒப்பந்தக்காரர் மட்டுமே ரிலையன்ஸ் நிறுவனம். இதற்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே உள்ளது' என மத்திய அரசு கூறிவிட்டது. இதையே முகேஷ் அம்பானியும் கூறிவருகிறார்.


இந்தியாவில் எரிவாயுவின் விலையை நிர்ணயிக்கும் உரிமை இந்திய அரசுக்கு மட்டுமே இருக்கும் நிலையில், இந்த மோதல் மூலம் இந்தியாவின் எரிசக்தி கொள்கையில் நிலவும் குறைபாடுகள் வெளியில் வந்திருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.


கிருஷ்ணா - கோதாவரிப் படுகை இயற்கை எரிவாயுவுக்காக இரு நிறுவனங்கள் மோதிக் கொள்வது, இரண்டு நாடுகளுக்கான சண்டை போல மாறிவருகிறது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மூலம்