ஈரான் இராணுவ அணிவகுப்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 9 பேர் உயிரிழப்பு
புதன், செப்டெம்பர் 22, 2010
- 18 பெப்பிரவரி 2018: இரான் நாட்டின் வானூர்தி மலையில் மோதி விபத்துக்குள்ளானது
- 7 சனவரி 2018: ஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை
- 28 சனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு
- 17 சனவரி 2016: ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடை விலக்கப்பட்டது
- 26 அக்டோபர் 2013: ஈரான் 'பழி வாங்கும் நடவடிக்கையாக' 16 போராளிகளைத் தூக்கிலிட்டது
ஈரானில் மகாபாத் என்ற வட-மேற்கு குர்திய நகரத்தில் இராணுவ அணிவகுப்பு ஒன்றில் இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் ஒன்றில் குறைந்தது ஒன்பது ஈரானியர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 35 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
இறந்தோரில் பெரும்பான்மையானோர் இராணுவ அணிவகுப்பைப் பார்வையிட வந்திருந்த பெண்களும் குழந்தைகளும் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான்-ஈராக் போர் ஆரம்பித்து 30 ஆண்டுகள் நிறைவு வைபவத்தைக் கொண்டாடும் முகமாகவே இந்த இராணுவ அணிவகுப்பு இடம்பெற்றது. ஈரான் ஈராக் போர் 1980 இல் ஆரம்பித்து 1988 வரை நீடித்திருந்தது. இப்போரின் போது மில்லியன் கணக்கில் மக்கள் உயிரிழந்தனர்.
குர்தியப் பிரிவினைவாதிகளே இத்தாக்குதலை மேற்கொண்டதாக மாகாண ஆளுநர் தெரிவித்தார். பின்னர் வந்த தகவல்களின் படி இறந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக குர்திய அரசியல் ஆர்வலர்கள் பலர் இங்கு கைது செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவிக்கிறார். ஈரானின் மேற்குப் பகுதியில், வடக்கு ஈராக், மற்றும் கிழக்கு துருக்கி ஆகிய எல்லைப்பகுதிகளில் குர்திய இனத்தவர்கள் குறிப்பிடத்தக்க அளவு வசிக்கின்றனர்.
மூலம்
தொகு- Nine killed in Iran in bomb attack on military parade, பிபிசி, செப்டம்பர் 22, 2010
- Deadly blast hits Iran parade, அல்ஜசீரா, செப்டம்பர் 22, 2010