ஈரானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரித்தானிய பாய்மரப்படகுப் பயணிகள் விடுதலை
வியாழன், திசம்பர் 3, 2009
- 18 பெப்பிரவரி 2018: இரான் நாட்டின் வானூர்தி மலையில் மோதி விபத்துக்குள்ளானது
- 7 சனவரி 2018: ஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை
- 28 சனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு
- 17 சனவரி 2016: ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடை விலக்கப்பட்டது
- 26 அக்டோபர் 2013: ஈரான் 'பழி வாங்கும் நடவடிக்கையாக' 16 போராளிகளைத் தூக்கிலிட்டது
பிரித்தானியாவைச் சேர்ந்த ஐந்து பாய்மரப்படகு பயணிகளை ஈரான் விடுவித்திருக்கிறது. இவர்கள் ஈரானியக் கடற்பரப்பினுள் பயணித்த பின்னர் ஒரு வாரம் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்கள்.
துபாயில் துவங்கவிருந்த 580 கிமீ துபாய்-மஸ்கட் பாய்மரப்படகுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக அவர்கள் பாரேனிலிருந்து கடலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது ஈரானியக் கடற்பரப்பினுள் நுழைந்துவிட்டனர். இவர்கள் நவம்பர் 25 இல் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இரானிய கடற்பரப்பினுள் தவறுதலாக வந்துவிட்டனர் என்பது தெளிவாகிறது என்று ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானியர்கள் இப்போது இந்த பாய்மரப்பயணிகள் மற்றும் அவர்களது சேதமடைந்த படகை பன்னாட்டு கடற்பரப்பினுள் இழுத்து வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் அங்கு ஒரு கப்பல் மூலம் துபாய்க்கு கொண்டு செல்லப்படுவார்கள்.
பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் கருத்து வெளியிடுகையில், இந்த பயணிகளின் கஷ்டம் முடிந்துவிட்டது என்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறியிருக்கிறார்.
மூலம்
தொகு- "Skipper of UK-crewed yacht admits Iran waters 'mistake'". பிபிசி, டிசம்பர் 2, 2009
- "Families 'elated' as Iran frees British yachtsmen". சீஎனென், டிசம்பர் 2, 2009
- "Iran releases 5 British sailors detained at sea". அசோசியேட்டட் பிரஸ், டிசம்பர் 2, 2009