ஈரானின் கிழக்குப் பகுதியைப் பெரும் நிலநடுக்கம் தாக்கியது, எண்மர் உயிரிழப்பு
வியாழன், திசம்பர் 6, 2012
ஈரானில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: ஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை
- 17 பெப்ரவரி 2025: இரான் நாட்டின் வானூர்தி மலையில் மோதி விபத்துக்குள்ளானது
- 17 பெப்ரவரி 2025: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு
- 17 பெப்ரவரி 2025: ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடை விலக்கப்பட்டது
- 17 பெப்ரவரி 2025: ஈரான் அரசுத்தலைவர் தேர்தலில் சீர்திருத்த அணியைச் சேர்ந்த அசன் ரவ்கானி வெற்றி
ஈரானின் அமைவிடம்
ஈரானின் கிழக்கே பெரும் நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானித்தான் எல்லைக்கு அருகில் தெற்கு கொரொசான் மாகாணத் தலைநகர் சோகானில் இருந்து 25 கிமீ தூரத்தில் நேற்று மாலை உள்ளூர் நேரம் 20.:38 மணிக்கு 5.5 அளவு நிலநடுக்கம் தாக்கியது. குறைந்தது 20 பேர் காயமடைந்தனர். மாகாணத் தலைநகரில் பலர் தமது வீடுகளை விட்டு வெளியேறினர்.
பல கட்டடங்கள் சேதமடைந்தன. மீன்னிணைப்புகள் துண்டிக்கப்பட்டன. 12 கிராமங்கள் இந்நிலநடுக்கத்தினால் பாதிப்படைந்ததாக உள்ளூர் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
ஈரானில் 2003 ஆம் ஆண்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இவ்வாண்டு ஆகத்து மாதத்தில் வட-மேற்கு ஈரானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 30 பேர் வரை கொல்லப்பட்டனர்.
மூலம்
தொகு- Eastern Iran hit by deadly earthquake, பிபிசி, டிசம்பர் 5, 2012
- Earthquake kills 8 in Iran, டெய்லி ஸ்டார், டிசம்பர் 6, 2012