ஈராக் ஆளுநர் மாளிகை அருகே குண்டுவெடித்ததில் 25 காவல்துறையினர் இறப்பு
புதன், சூன் 22, 2011
ஈராக்கில் இருந்து ஏனைய செய்திகள்
- 28 சனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு
- 11 செப்டெம்பர் 2014: ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க நாட்டோ படை நாடுகள் உடன்பாடு
- 23 சூலை 2014: ஈராக்கின் மோசுல் நகரில் 1,800 ஆண்டுகள் பழமையான கிறித்தவக் கோவில் தீயிடப்பட்டது
- 5 சூலை 2014: ஈராக்கில் கிளச்சியாளர்களிடம் மாட்டிக்கொண்ட இந்திய செவிலியர் விடுவிப்பு
- 22 சூன் 2014: சுணி இசுலாமியப் போராளிகள் இரு நாட்களில் ஈராக்கின் நான்கு நகரங்களைக் கைப்பற்றினர்
ஈராக்கின் அமைவிடம்
ஈராக் தலைநகர் பாக்தாத்தின் தெற்கே ஆளுநர் மாளிகைக்கு அருகே நடந்த குண்டுவெடிப்பி்ல 25 பேர் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயம் அடைந்ததாகவும் ஈராக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இங்குள்ள ஆளுநர் சலாம் ஹூசைன் வீட்டு முன்பு 30 மீட்டர் தூரத்தில் காவல் துறையினரின் சோதனைச் சாவடி அமைத்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணிக்கு 2 கார்களில் வெடி குண்டுகளை ஏற்றி வந்த தற்கொலைப்படையினர் சோதனைச் சாவடி மீது மோதினர். இதில் இருந்த குண்டுகள் வெடித்து சிதறியதில் ஆளுநர் வீட்டுக்கு முன்பு காவலுக்கு இருந்த 25 காவல்துறையினர் இறந்தனர். மேலும் 30 காவல்துறையினர் காயம் அடைந்து மருத்துவமனயில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறனர்.
மூலம்
தொகு- இன்று காலை ஈராக் ஆளுநர் மாளிகை அருகே குண்டுவெடிப்பு: 22 பேர் பலி, தட்ஸ்தமிழ், சூன் 22, 2011
- இராக்கில் கார் குண்டு வெடிப்பு: 25 போலீஸôர் சாவு, தினமணி, சூன் 22, 2011