இலங்கையில் மூன்று அமைச்சர்களின் பதவி பறிப்பு

வெள்ளி, மார்ச்சு 9, 2007

இலங்கையின் மிகப்பெரிய அமைச்சரவையில் இருந்து மூன்று மூத்த அமைச்சர்களான மங்கள சமரவீர, அனுரா பண்டாரநாயக்க, சிறீபதி சூரியாராச்சி ஆகியோரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது.இலங்கை அரச அதிபர் மகிந்த ராஜபக்சவால் தனக்குரிய அதிகாரத்தைப்பயன்படுத்தி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இவர்கள் வகித்துவந்த அமைச்சர் பதவிகள் அதிபரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இடம்பெற்ற புதிய அமைச்சரவை நியமனங்களைத் தொடர்ந்து சிறி லங்கா சுதந்திரக் கட்சியில் உருவாகிய உட்பிரச்சினை உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலைமையே அதிபரின் நடவடிக்கைக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.