இரு இளம் தமிழ் பெண்கள் கொழும்பு கால்வாயில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டனர்

சனி, ஆகத்து 15, 2009, கொழும்பு, இலங்கை:


கொழும்பு, பௌத்தாலோக மாவத்தையில் உள்ள ரஷ்யா கார் பார்க்கிற்கு பின்புறமாகவிருக்கும் கழிவு நீர் வாய்க்கால் ஒன்றில் இரு தமிழ் யுவதிகளின் சடலங்கள் சனிக்கிழமை முற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இந்தப் பெண்கள் இருவரும் சடலமாகக் கிடப்பதை பிரதேசவாசிகள் கண்டு கறுவாதோட்டம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.


இலங்கையின் மலையகத்தில் மஸ்கெலியா, லக்சபான தோட்டத்தைச் சேர்ந்த ஜீவராணி, சுமதி எனும் சுமார் 16, 17 வயது மதிக்கத் தக்கவர்கள் பெண்கள் இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.


இவர்கள் பௌத்தாலோக மாவத்தையிலுள்ள இரு வீடுகளிலேயே இந்த இரு யுவதிகளும் பணிப் பெண்களாகத் தொழில் புரிந்து வந்துள்ளனர்.


இவ்விருவரும் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டுக் கொண்டு வந்து போடப்பட்டார்களா, அல்லது வாகனத் தரிப்பிடப் பகுதியில் கொல்லப்பட்டார்களா என்பதைப்பற்றித் தகவல் வெளியாகவில்லை. இந்தக் கொலைக்கான காரணத்தைக் கண்டறியவும், சந்தேக நபர்களைக் கைது செய்யவும் கறுவாத்தோட்ட பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.


மூலம்

தொகு