இரண்டு ஒலி மூலங்களை ஒன்றிணைக்க ஒரே சில்லுடன் கூடிய புதிய ஒலி செயலாக்கி உருவாக்கம்
சனி, ஏப்பிரல் 20, 2013
- 8 பெப்பிரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது
- 23 பெப்பிரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
- 15 பெப்பிரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது
- 14 சனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது
- 26 திசம்பர் 2016: இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது
வீட்டுப் பயன்பாட்டிற்கும் நவீன ஒலி வடிவமைப்பாளர்களுக்கும் இரண்டு ஒலி மூலங்களை ஒரே சில்லு (chip) மூலம் ஒன்றிணைக்க அனுமதிக்கும் ஒலி செயலாக்கியை அமெரிக்காவின் டெக்சாசு இன்சுட்ரூமன்சு நிறுவனம் தயாரித்துள்ளது.
TAS5548 என்ற இந்தச் சில்லு, இரண்டு ஒத்தியங்கா மாதிரி விகித மாற்றிகளைக் (asynchronous sample rate converters) கொண்டவொரு துடிப்பு அகல குறிப்பேற்ற (PWM) ஒலி செயலாக்கியாகும். இதனை அந்நிறுவனம் இதே போன்று ஏனைய ஒலி செயலாக்கிகளில் இரண்டு சில்லுகள் தேவைப்படுவதைப் போலல்லாமல் ஒரே சில்லுடன் வடிவ நெகிழ்மையும், செலவு சேமிப்பும் கொண்டுள்ளதாக கூறுகிறது.
இந்த செயலாக்கி 8 முதல் 192 கிலோஎர்ட்சு மாதிரி விகிதத்தை ஏற்கிறது, மேலும் கெழுக்களை உருவாக்கி, சேமித்து, மாற்றுவதை தடுக்குமாறு அவைகளை 96 அல்லது 192 கிலோஎர்ட்சாக மாற்றியமைக்கிறது. திறன் வரம்பை அடைந்தால் மிக ஆற்றல்மிக்கதாக செயல்பட புரவன் செயலாக்கியை (host processor) குறுக்கிட்டு, ஒரு தொகுத்த சுட்டித் திறன் இயக்கியானது (integrated smart power manager) ஒலி கட்டகத்தின் உச்சத் திறனை (peak power) கட்டுப்படுத்துகிறது.
உயர் முனை ஒலி அமைப்பிற்கு, ஒரு திறன் வழங்கி ஒலிமுழக்கக் கட்டுப்பாடு ஆற்றல்மிக்கதொரு உயர் திறன் செயல்பாட்டை தருகிறது.
மூலம்
தொகு- PWM audio processor lets designers mix two audio sources, நியூ எலக்ட்ரானிக்ஸ், ஏப்ரல் 19, 2013
- TAS5548 96KHz PWM Modulator with integrated ASRC and Audio Processor, டெக்சாசு இன்சுட்ரூமன்சு