இன்றும் இந்தியப் பங்குச்சந்தை ஏற்றம்

வியாழன், பெப்பிரவரி 17, 2011

இந்த வாரத்தின் நான்காம் நாளான இன்று (வியாழக் கிழமை)காலையிலேயே ஏற்றத்துடன் காணப்பட்ட இன்றைய பங்குச் சந்தை, உடனடியாக ஒரு இறக்கத்தைச் சந்தித்து, மாலையில் ஏற்றத்துடன் முடிவடைந்தது. தொடங்கிய சில நிமிடங்களில் மும்பைப் பங்குச்சந்தை(BSE), தொடக்கத்திலேயே குறைந்த அளவாக 18,237.29 புள்ளிகளை எட்டிப் பின்னர் சில வினாடிகளில் 18,481.45 என்ற அளவிற்கு அதிகரித்து, பின்னர் மீண்டும் 18,530.97 என்ற அளவிற்க்கு ஏற்றத்தைக் காண்பித்தது. பிறகு ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட மும்பைப் பங்குச் சந்தை மாலையில் முடிவடையும் பொழுது 205.92 புள்ளிகளைக் கூடுதலாகப் பெற்று 18,506.82 புள்ளிகளில் முடிவடைந்தது.


தேசியப் பங்குச் சந்தை(NSE) தொடக்கத்திலேயே மிகக் குறைந்த அளவாக 5,465.1 என்ற அளவிற்குக் குறைந்து, பின் மீண்டும் 5,552.7 என்ற அளவில் உயர்ந்து மாலையில் முடிவடையும் பொழுது 5,546.45 புள்ளிகளில் 64.75 புள்ளிகளைக் கூடுதலாகப் பெற்று ஏற்றத்துடன் முடிவடைந்தது.