இந்தியாவில் உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 43 பேர் இறப்பு

சனி, ஆகத்து 8, 2009, உத்தரகாண்ட், இந்தியா:

இந்திய வரைபடத்தில் உத்தரகாண்ட் மாநிலம்
இந்திய வரைபடத்தில் உத்தரகாண்ட் மாநிலம்


இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தபட்சம் 43 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


இமயமலையின் அடிவாரத்தில் இருக்கின்ற பிதோராகார்த் மாவட்டத்தில் இருக்கின்ற மூன்று ஊர்களில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.


நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு பொலிஸார் உட்பட பல நிவாரண பணியாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.


இதுவரையில் குறைந்தப்பட்சம் 17 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மூலம் தொகு