இந்தியாவின் திரிபுராவில் கிளர்ச்சியாளர்களால் 8 பேர் படுகொலை

புதன், நவம்பர் 11, 2009


இந்திய அரசிடம் சரணடைந்த தமது அமைப்பின் உறுப்பினர்களின் உறவினர்கள் 8 பேரை திரிபுரா தேசிய விடுதலை முன்னணியினர் கொன்றதாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் காவல்துறையினர் கூறுகிறார்கள்.


இலகுவில் சென்றடைய முடியாத கிராமமான புஸ்ரம்பராவுக்கு அருகே இடம்பெற்ற இந்தக் கொலைகள், கடந்த திங்களன்று 7 பேர் சரணடைந்ததற்கான பழிவாங்கலாகவே நடந்துள்ளன என்று திரிபுராவின் உயர் பொலிஸ் அதிகாரி பரனோய் சஹாய் கூறியுள்ளார்.


அந்தக் கிராமத்தில் இருந்து கடத்தப்பட்ட சிறிது நேரத்தில், இந்த 4 ஆண்கள் மற்றும் 4 பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.

மூலம்

தொகு