இந்தியாவின் சத்தீசுக்கரில் மாவோயிசத் தீவிரவாதிகள் தாக்குதல்
திங்கள், சூலை 13, 2009 சத்தீஷ்கர், இந்தியா:
இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிசத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 90 கிமீ தூரத்தில் ராஜ்நந்த்கோன் மாவட்டத்தில் நடைபெற்ற இருவேறு தாக்குதல் நிகழ்வுகளில் இவர்கள் கொல்லப்பட்டதாக மாவோயிசத் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்து துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பவன் தேவ் தெரிவித்துள்ளார்.
முதலில் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த காவல்துறையினர் மீது 200 முதல் 300 வரையான தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகவும், அதன் பின்னர் அவர்களுக்கு துணை புரிவதற்காக வந்த காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் மாவட்ட காவல்துறை தலைவரும் கொல்லப்பட்டுள்ளார்.