இந்தியக் காவல்துறை அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

செவ்வாய், ஆகத்து 4, 2009, ஐக்கிய அமெரிக்கா:


இந்தியக் காவல்துறையினர் சட்டவிரோதக் கொலைகள் மற்றும் ஏதேச்சாதிகார கைதுகள் உள்ளிட்ட பரவலான துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவதாக அமெரிக்காவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் (ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்) என்ற அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.


குற்ற ஒப்புதலைப் பெறுவதற்காக இந்தியப் பொலிசார் சித்திரவதை, தாக்குதல் மற்றும் வேறு வழிவகைகளைப் பயன்படுத்துவதாக அந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் குற்றங்களைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவது மிகக்குறைவே எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.


இந்திய காவல்துறையினர் பிரித்தானியக் காலனித்துவத்தின் பின்னர் சிறிதளவே மாற்றம் பெற்றுள்ளதாகவும் இது நாட்டின் ஜனநாயகத்திற்கே களங்கம் எனவும் சுட்டிக்காட்டியுள்ள அந்த அமைப்பு இந்திய அரசாங்கம் பொலிஸ் படையை மறுசீரமைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.


மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஓராண்டு காலமாக இந்தியாவின் மனித உரிமை மீறல்கள் குறித்து நடத்திய விசாரணைகளை அடுத்து 118-பக்க ஆவணம் ஒன்றை "Broken System: Dysfunction, Abuse and Impunity in the Indian Police" என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.


மூலம்

தொகு