இத்தாலியப் பள்ளிகளில் சிலுவைகளை வைக்கத் தடை

வியாழன், நவம்பர் 5, 2009


இத்தாலியின் பள்ளி வகுப்புக்களில் சிலுவைகள் வைக்கப்படக் கூடாது என்று ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


வெனிஸ் நகருக்கு அருகேயுள்ள அபானோ டெர்மே என்ற ஊரில் உள்ள சிறுவர் பள்ளி கத்தோலிக்க சிலுவைகளை அகற்ற மறுத்ததை எதிர்த்து பெற்றோர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த புகார் மீது இந்த தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.


பொதுப் பள்ளிக் கூடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலுவைகள் மத மற்றும் கல்வி சுதந்திரத்தை மீறுவதாக உள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது.


இந்த முடிவை வெட்கக் கேடான ஒன்று என்று வர்ணித்துள்ள இத்தாலி அரசு, சிலுவை இத்தாலிய பாரம்பரியத்தை காட்டுவதாகவும் கத்தோலிக்கத்தை பறைசாற்றவில்லை என்றும் கூறியுள்ளது.


நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் வத்திகானிலுள்ள ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை அதிர்ச்சி அடைந்துள்ளது என அதன் சார்பாகப் பேசவல்லவர் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிக்கூடங்களில் சிலுவைகளை வைத்திருப்பது என்பது மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் உரிமைகளை மீறும் செய்ல் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது

மூலம் தொகு