இசுரேலின் முன்னாள் பிரதமர் எகுத் ஒல்மர்ட் மீது ஊழல் குற்றச்சாட்டுகள்

ஞாயிறு, ஆகத்து 30, 2009, இசுரேல்:


இசுரேலின் முன்னாள் பிரதமர் எகுத் ஒல்மர்ட் மீது மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.


அமெரிக்க வியாபாரி ஒருவரிடம் இருந்து பணம் நிரப்பப்பட்ட அஞ்சல் உறைகளை பெற்றது, பிரயாண செலவுகளை அதிகமாக கணக்கு காண்பித்து இஸ்ரேலிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்றது என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை இஸ்ரேலிய அட்டர்னி ஜெனரல் எகுத் ஒல்மர்ட் மீது பதிவு செய்துள்ளார்.


ஜெருசலேத்தின் மேயராக இருந்த போதும், பின்னர் காபினட் அமைச்சராக இருந்த போதும் இவர் இந்த தவறுகளை செய்ததாக கூறப்படுகிறது.


ஆனால் தான் எவ்வித தவறையும் செய்யவில்லை என எகுத் ஒல்மர்ட் கூறி வருகின்றார்.

மூலம்

தொகு