ஆப்பிள் நிறுவனம் சிறிய ஐபேடை தயாரிக்கத் திட்டம்

This is the stable version, checked on 4 சூலை 2012. 2 pending changes await review.

புதன், சூலை 4, 2012

கூகிள் நெக்சசு 7 ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேடை முந்துவதாக இருக்கும் என சிலர் சொல்கின்ற வேலையில், ஆப்பிள் நிறுவனம் ஒரு சிறிய ஐபேடைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக புளூம்பெர்க் நிறுவனம் அறிவித்துள்ளது.


படிமம்:IFA 2010 Internationale Funkausstellung Berlin 03.JPG
ஐபேடு

தற்போதுள்ள ஐபேடின் மூலைவிட்டம் 9.7 அங்குலத்தில் இருந்து 7 - 8 அங்குலமாக குறைக்கப்படும் என கூறியுள்ளது. மேலும் இது இவ்வாண்டு டிசம்பர் மாதம் கிறித்துமசு காலத்தில் சந்தைக்கு வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன் விலை 200 டாலர்களாக இருக்கலாம்.


ஐபேடு-2 இல் உள்ளது போல படத்துணுக்குகளை இச்சிறிய ஐபேடை வடிவமைத்து வருகிறது. ஆனாலும், ஐபேடு-3 இல் உள்ளது போல விழித்திரை படங்காட்டியை இச்சிறிய ஐபேடை கொண்டிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வின்டோஸ் நிறுவனமும் வின்டோஸ் 8ஐ அக்டோபரில் வெளியிடுவதாக உள்ளதால், இவ்விரண்டிற்கும் இடையில் போட்டி நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகள் தொடர்பாக வரும் அக்டோபர் மாதத்தில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் புதிய ஐபோனையும் வெளியிடத் தீர்மானித்துள்ளது.


அமேசானின் கின்டில் போன்ற சிறுய வகைக் கைக்கணிகிகள் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் விற்பனையாகியுள்ளது. சூலை 17 இல் வெளிவரவிருக்கும் கூகுளின் நெக்சசு 7 சிறியவகைக் கைக்கணினி £159 களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.


மூலம்

தொகு