அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவராக வேழவேந்தன்

செவ்வாய், சூன் 30, 2009 சென்னை:

வேழவேந்தன், அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது பற்றி, முதல்வர் கருணாநிதி வெளியிட்ட உத்தரவு: அறிவியல் தமிழ் மன்றம், தமிழ் வளர்ச்சித் துறையின்கீழ் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக, கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து மணவை முஸ்தபா இருந்து வந்தார். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கடந்த பல மாதங்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து தாமாக முன்வந்து விலகிக் கொள்ள விரும்புவதாக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார் . அந்தக் கடிதத்தை ஏற்று, அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து மணவை முஸ்தபா விடுவிக்கப்பட்டு அவரது இடத்தில் புதிய தலைவராக கவிஞர் கா.வேழவேந்தனை நியமனம் செய்து முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.