அமெரிக்காவும் ரஷ்யாவும் அணு ஆயுதங்களைக் குறைப்பதற்கு ஒப்புதல்

திங்கள், சூலை 6, 2009 மாஸ்கோ

ஐக்கிய அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்களை பெருமளவில் குறைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளன.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் ரஷ்ய அதிபர் டிமித்ரி மெத்வதேவ் ஆகியோருக்கு இடையில் மாஸ்கோவில் நடந்த சந்திப்பின் போது இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

இது தொடர்பான ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து ஏழு ஆண்டு காலத்திற்குள், இரு நாடுகளிடமும் இருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை ஒவ்வொருநாடும் 1700க்கும் குறைவான அளவுக்கு கொண்டுவருவதற்கு இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது.

1991 ஆண்டு ஏற்பட்ட ஸ்டார்ட் ஒப்பந்தம் எதிர்வரும் டிசம்பர் மாதம் முடிவுக்கு வந்தபிறகு இந்த புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்.

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான உறவில் ஏற்பட்ட பாதிப்புக்களை சரிசெய்வதற்கான நோக்கில் இன்றைய மாஸ்கோ சந்திப்பு நடத்தப்பட்டது.

மூலம் தொகு