அமெரிக்கப் படையின் கடைசி இராணுவக் குழுவும் ஈராக்கிலிருந்து சென்றது
ஞாயிறு, திசம்பர் 18, 2011
- 28 சனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு
- 11 செப்டெம்பர் 2014: ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க நாட்டோ படை நாடுகள் உடன்பாடு
- 23 சூலை 2014: ஈராக்கின் மோசுல் நகரில் 1,800 ஆண்டுகள் பழமையான கிறித்தவக் கோவில் தீயிடப்பட்டது
- 5 சூலை 2014: ஈராக்கில் கிளச்சியாளர்களிடம் மாட்டிக்கொண்ட இந்திய செவிலியர் விடுவிப்பு
- 22 சூன் 2014: சுணி இசுலாமியப் போராளிகள் இரு நாட்களில் ஈராக்கின் நான்கு நகரங்களைக் கைப்பற்றினர்
ஈராக்கில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த ஐக்கிய அமெரிக்கப் படையின் கடைசி ராணுவக் குழு நேற்று முன்தினம் ஈராக்கில் இருந்து விடைபெற்றது. இதையொட்டி ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் சார்பாக பிரிவு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில் அமெரிக்க கர்னல் ரிச்சார்ட் கைசர், ஈராக் அதிகாரி ஹூசைன் அல் அசாதி உள்ளி்ட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய உசைன் அல் அசாதி ஈராக்கில் உள்ள கடைசி ராணுவக் குழு விடை பெறுவதாக ஈராக் மக்களுக்கு அறிவிப்பதில் பெருமை அடைகிறேன். இன்று எங்கள் பணியின் கடைசி பக்கத்தை திருப்புகிறோம். ஈராக்கில் உள்ள கடைசி ராணுவப் படைக்கு பொறுப்பாளராக இருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். ஈராக்கில் இருந்த அமெரிக்க ராணுவம் படிப்படியாக நாடு திரும்பி வந்த நிலையில் இறுதியாக நாசிரியாவில் மட்டுமே 4,000 அமெரிக்க வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
ஈராக்கில் சதாம் உசேனை வீழ்த்தும் திட்டத்துடன், கடந்த 2003ம் ஆண்டு 1,70,000 அமெரிக்க படைவீரர்கள் களமிறங்கினர். நீண்ட தேடுலுக்கு பிறகு சதாம் உசேனை கைது செய்து தூக்கிலிடப்பட்டார். பின்பு சதாமின் ஆதரவாளர்கள் ஈராக்கில் வன்முறைகளில் ஈடுபட்டனர். ஆங்காங்கே குண்டுவெடிப்புகளும், வன்முறை சம்பவங்களும் நடைபெற்றன. இதனை தடுக்கும் பொருட்டு, அமெரிக்க படைகள் ஈராக்கில் தொடர்ந்து பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ஆண்டு இறுதிக்குள் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் படிப்படியாக அமெரிக்காவிற்கு திரும்ப அழைத்து கொள்ளப்படுவார்கள் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.
தொடர்புள்ள செய்திகள்
தொகு- 28 டிசம்பர் 2010: ஈராக்கில் இருந்து அமெரிக்கப் போர்ப் படைகள் வெளியேற்றம்
மூலம்
தொகு- US Forces hand over last military base to Iraq , Iraq-News, டிசம்பர் 16, 2011
- US military hands over control of last Iraq base , yahoo, டிசம்பர் 17, 2011
- US military hands over control of last Iraq base, techsupportforum, டிசம்பர் 17, 2011
- US military hands over control of last Iraq base, google, டிசம்பர் 17, 2011
- Obama welcomes home troops from Iraq,cbsnews, டிசம்பர் 17, 2011
- ஈராக்கில் இருந்த அமெரிக்கப் படைகள் முழுமையாக விடைப் பெற்றது, தட்ஸ்தமிழ், டிசம்பர் 17, 2011