அமீரகம் - சவுதி எல்லையில் சுமையுந்து ஓட்டுநர்களின் பிரச்சினை தொடர்கிறது

ஞாயிறு, ஏப்பிரல் 4, 2010

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் இருந்து பலவிதமான உணவுப்பொருட்கள் தரைமார்க்கமாக சவுதி அரேபியாவிற்கு சுமையுந்து மூலம் எடுத்துச்செல்லப்படுகிறது. அபுதாபியின் அல் குவைஃபாத் என்னும் இடத்தில் கடந்த வியாழக்கிழமை, ஏப்ரல் 1 முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை வரை வாகனங்கள் செல்வதில் மிகவும் தாமதம் ஏற்பட்டது. இதனால் சுமார் 12 கிமீ அளவுக்கு வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இதனால் வாகன ஓட்டிகள் உணவு, குடிநீர் இல்லாமையாலும் அதிக வெப்பத்தினாலும் கடும் சிரமத்திற்குள்ளாயினர். சரியான நேரத்தில் பொருட்களை சேர்ப்பிக்காதினால் வியாபாரிகளுக்கு நட்டம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.


அமீரக அதிகாரிகளின் ஓட்டுநர்களுக்கு வேண்டிய உணவு, பானங்களை விநியோகித்தனர். பின்னர் சவூதி அரேபிய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி விரைவில் செல்ல ஏற்பாடு செய்தனர். வார இறுதி நாட்களாதலால் அலுவலர்கள் பற்றாக்குறையினால் தாமதம் ஏற்பட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.


சில ஆண்டுகளாக சவூதி அரேபியாவிற்கும் அமீரகத்திற்கும் சிற்சில விடயங்களின் நல்லுறவு இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக அரபு தேசத்திற்கு ஓரே பொது நாணயம் தொடர்பாக தலைமையிடம் அமைக்கும் பணியில் ரியாதிற்கும் அபுதாபிக்கும் பிரச்சினை இருந்ததாகவும் அதனாலேயே அமீரகம் பொது நாணயத்தின் திட்டத்தில் சேரவில்லை என்றும் பரவலாக பேசப்பட்டது.

மூலம்

தொகு